60.77 வீதமான வாக்காளர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ்க் கூட்டமைப்பை நிராகரிப்பு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 60.77 வீதமான மூன்று இலட்சத்து 21 ஆயிரத்து 662 வாக்காளர்கள் மக்கள் யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்துள்ளனர். வாக்களிப்பில் பங்கடுக்காத மக்கள் மொத்த வாக்காளரில் 38.43 விகிதமாகவும் வாக்களிப்பில் பங்கெடுத்து வாக்குகளை செல்லுபடியாக்கியோர் 4.81 விகிதமாகவும் காணப்படுகின்ற அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்காது ஏனைய கட்சிகளிற்கு வாக்களித்தோர் 17.52 வீதமாகவும் காணப்படுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மொத்த வாக்காளர்களில் 39.22 விகிதமானவர்களே யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களில் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்காளர்கள் எண்ணிக்கை 529,239
வாக்களித்தோர் எண்ணிக்கை 325,805
செல்லுபடியற்றதாக்கியோர் எண்ணிக்கை 25,496
வாக்களிக்காதோர் எண்ணிக்கை 203,434

தமிழ்க்கூட்டமைப்பிற்கு வாக்களித்தோர் 207,577
ஏனைய கட்சிகளிற்கு வாக்களித்தோர் 93,732

வாக்களிக்காதோரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வாக்களித்தோரும் நிராகரித்தோரும் 118,228

வாக்களிக்காதோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வாக்களித்தோரும் நிராகரித்தோரும் 321,662

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*