6 புதிய அர­சியல் கட்சிகளுக்கு அங்­கீ­காரம்!

தேசிய ஐக்­கிய முன்­னணி உள்­ளிட்ட ஆறு புதிய அர­சியல் கட்­சிகள் தேர்தல் ஆணைக்­ கு­ழு­வினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் ஏற்­க­னவே அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருந்த 64 அர­சியல் கட்­சி­க­ளுடன் சேர்த்து தற்­போது நாட்டில் 70 அர­சியல் கட்­சிகள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. இது­தொ­டர்பில் தேர்தல் ஆணைக்­குழு நேற்று விடுத்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:-

இது­வரை இலங்­கையில் 64 அர­சியல் கட்­சிகள் பதிவு செய்­யப்­பட்ட அர­சியல் கட்­சி­க­ளாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன அந்த வகையில் 2017 ஆம் ஆண்­டுக்­காக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சியல் கட்­சி­க­ளாக பதிவு செய்­யப்­படும் நோக்கில் 92 விண்­ணப்­பங்கள் கிடைத்­தன. அது தொடர்­பாக நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­களைத் தொடர்ந்து ஆறு அர­சியல் கட்­சிகள் புதி­தாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. புதிய ஆறு கட்­சி­களின் விப­ரங்கள் வரு­மாறு:

ஐக்­கிய தேசிய சுதந்­திர முன்­னணி

மைத்­திரி குண­ரத்ன என்­ப­வதை செய­லா­ள­ரா­கவும் வாழைப்­ப­ழச்­சீப்­புவை சின்­ன­மாகக் கொண்ட ஐக்­கிய தேசிய சுதந்­திர முன்­னணி புதி­தாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய இட­து­சாரி முன்­னணி

ஐக்­கிய இட­து­சாரி முன்­னணி என்ற கட்சி புதி­தாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்தக் கட்­சியின் செய­லா­ள­ராக லால் விஜ­ய­நா­யக்க செயற்­ப­டு­வ­துடன் கட்­சியின் சின்­ன­மாக தோனி காணப்­ப­டு­கின்­றது.

தொழி­லாளர் தேசிய முன்­னணி

தொழி­லாளர் தேசிய முன்­னணி என்ற கட்­சியின் செய­லா­ள­ராக எம். தில­க­ராஜா காணப்­ப­டு­வ­துடன் அந்­தக்­கட்­சியின் சின்­ன­மாக அரிவாள் உள்­ளது இந்­தக்­கட்­சிக்கும் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

தேசிய ஐக்­கிய முன்­னணி தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் செய­லா­ள­ராக எம். அசாத்­சாலி செயற்­ப­டு­கின்றார். அந்­தக்­கட்­சியின் சின்­ன­மாக மூக்­குக்­கண்­ணாடி ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி மற்­று­மொரு புதிய அர­சியல் கட்­சி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் செய­லா­ள­ராக எம்.ஆர். மொஹமட் நஜா செயற்­ப­டு­வ­துடன் இதன் சின்­ன­மாக இரட்­டைக்­கொ­டிகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

சிறி­லங்கா சோஷ­லி­சக்­கட்சி

மஹிந்த தேவகேவை செயலாளராகக் கொண்ட சிறிலங்கா சோஷலிசக்கட்சி புதிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் சின்னமாக பலூன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த புதிய ஆறு கட்சிகளுடன் நாட்டில் தற்போது 70 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com