சற்று முன்
Home / செய்திகள் / 5 வருடத்தில் 437 பிரேரணைகள் ; 19 நியதிச்சட்டங்கள்

5 வருடத்தில் 437 பிரேரணைகள் ; 19 நியதிச்சட்டங்கள்

வடமாகாண சபையின் 5 வருட காலப்பகுதியில் 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவா் கூறுகையில்,

வடமாகாணசபை தனது 5 வருட ஆட்சிக்காலத்தில் 133 அமா்வுகளை இதுவரை நடாத்தியுள்ளது. 134வது அமா்வு இறுதி அமா்வாகும். இதுவரை நடைபெற்ற 133 அமா்வுகளில் 437 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றுள் தமிழா் மீதான இனப்படுகொலை மற்றும் தாக்குதல்கள் தொடா்பான 6 முக்கியமான பிரேரணைகள் ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் மக்கள் நலன் சாா்ந்த தீா்மானங்களுமாக 437 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேபோல் குறைநிரப்பு நியதிச்சட்டங்களும் உள்ளடங்கலாக இதுவரை 29 நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள தீா்மானங்களில் பாலி ஆற்றிலிருந்து யாழ்.குடாநாட்டுக்கு நீரை கொண்டுவரும் தீா்மானம் எனக்கு ஆத்ம திருப்தியை கொடுத்துள்ளது.

அதனை நான் கொண்டுவந்தேன் என்பதற்கும் அப்பால் அதன் ஊடாக மக்கள் அடையவுள்ள நன்மைகளின் அடிப்படையில் அந்த தீா்மானம் மிக முக்கியமானது. மேலும் அந்த தீா்மானம் அடுத்த கட்டத்தை நோக்கி நகா்த்தப்படுகின்றது. இந்த திட்டம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நிறைவேற்றப்படும் என்றாா்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com