5 ஆயிரம் பேரை உடனடியாக ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவை அனுமதி

3561d7ec049384ac3de64426e88091b9_l5 ஆயிரம் பேரை ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல மகாவித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ‘நாட்டின் கல்விக்காக ஆகக்கூடிய நிதியை தற்போதைய அரசாங்கமே ஒதுக்கியுள்ளது. 20 ஆயிரம் ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 5 ஆயிரம் பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கம் அரசியலை அடிப்படையாகக் கொண்டே சகல விடயங்களையும் முன்னெடுத்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் இது வரையில் வழங்கிய நியமனங்களை அரசியல் அடிப்படையில் வழங்கவில்லை. 5ம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றத்தை மேற்ற கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com