45 நாட்களேயான சிசுவை தாக்கிய தந்தை தலைமறைவு!

பிறந்து 45 நாட்களேயான சிசுவை தாக்கிவிட்டு தந்தை தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில் 15.04.2016 அன்று இடம் பெற்றுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கணவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட வாய்தர்க்கம் முறுகலாக மாறி அத்திரம்மடைந்த தந்தை பிறந்து 45நாள் சிசுவை தலைபகுதியில் தாக்கி விட்டு தலைமறைவாகி உள்ளதாக குறித்த கணவரின், மனைவி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் 15.04.2016 அன்று மாலை முறைபாட்டை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

14.04.2016 அன்று இரவு மது அருந்திவிட்டு வந்த எனது கணவர் என்னை தகாத வார்த்தைகளால் ஏசி என்னையும் எனது குழந்தையும் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளதாக குறித்த கணவரின் மனைவி பொலிஸாருக்கு அளித்த வாக்குமுலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் தாக்கபட்டதாக கூறப்படும் தாய் மற்றும் 45 நாள் சிசுவும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதன் பின்னர் உடனடியாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூளரிய தெரிவித்தார்.

சம்பவம் குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com