45 ஆவது நீதியரசராக பிரியசாத் டெப் பதவிப் பிரமாணம்

இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசாரக உயர் நீதிமன்ற நீதிபதி பிரியசாத் டெப் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (02) முற்பகல் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

2007 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தின் தலைமை சட்ட ஆலோசகராக கடமையாற்றிய பிரியசாத் டெப் பல்வேறு, சந்தர்ப்பங்களில் பதில் பிரதம நீதியரசராக கடமையாற்றியுள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் கே. ஶ்ரீபவனின் இடத்திற்கே பிரியசாத் டெப் நியமிக்கப்பட்டுள்ளதோடு, அரசியலமைப்பு சபையினால் அவர் சிபாரிசு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பதவிப்பிரமாண நிகழ்வில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. அபேகோன் மற்றும் பிரியசாத் டெப்பின் குடும்பத்தினரும் பிரசன்னமாகியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com