4 ஆம் மாடிக்கு வரமாட்டேன் – நிராகரித்தார் சிவாஜி

வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை கொழும்பிலுள்ள நாலாம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைத்துள்ளனர். பௌத்த பிக்கு ஒருவர் தொடர்பில் சிவாஜிலிங்கத்தினால் வெளியிடப்பட்டதாகக் குறப்படும் கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை தன்னிடம் நிதி வசதி இன்மை காரணமாக குறித்த விசாரணைக்கு கொழும்பிற்கு வரமுடியாது என தான் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ள சிவாஜிலிங்கம் அவர்கள் தேவையானால் வல்வைட்டித்துறைக்கோ அல்லது யாழ்ப்பாணத்துக்கோ வந்து விசாரணை மேற்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com