சற்று முன்
Home / செய்திகள் / 35 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கல்வி அமைச்சு நடவடிக்கை

35 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கல்வி அமைச்சு நடவடிக்கை

சுமார் 35,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விஞ்ஞானம், கணிதம், உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கே, இவ்வாறு வெற்றிடம் நிலவுவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலம் உள்ளிட்ட சில பாடங்களுக்கு மேலதிகமாக ஆசிரியர்கள் உள்ளபோதிலும், சில பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், மேலதிகமாக உள்ள ஆசிரியர்களை, ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முனனெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com