319 முல்லைத்தீவு பட்டதாரிகளுக்கு ஏப்பிரல் 23 – 25 இல் நேர்முகத் தேர்வு – உதவி அரசாங்க அதிபர் தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 319 பட்டதாரிகளுக்கான நேர்முக தேர்வுகள் எதிர்வரும் 23ம், 24ம், 25ம்திகதிகளில் நடைபெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தினால் தெரிவிக்கபபட்டுள்ளது.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபரை வாகீசம் தொடர்புகொண்டு கேட்டபோது,

மத்திய அரசாங்கத்தினால் கோரப்பட்ட விண்ணப்பத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 319 பட்டதாிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான நேர்முத் தேர்வினை ஏப்பிரல் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதிக்குள் நடத்தி முடிக்குமாறு எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஏப்பிரல் 23 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதிவரை நேர்முகத் தேர்வுகளை நடத்தவுள்ளோம் என்றார்.

நாடாளவிய ரீதியில் கடந்த 2016ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட இருபதாயிரம் பட்டதாரிகளை சேவைகளில் இணைத்துக்கொள்ளும் பொருட்டு நேர்முக தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இலங்கை பூறாகவும் வேலையற்ற 57 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளதாகவும் இதில் முதற்கட்டமாக இருபதாயிரம் பட்டதாரிகளை சேவைகளில் இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும் இதில் சேவைகளில் இணைத்துக்கொள்ளும் படடதாரிகள் இரண்டு வருட பயிற்சிகாலங்கள் சேவையாற்ற வேண்டும் என்பதுடன் மாதாந்தம் இருபதாயிரம்; ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்படுவதுடன் வயதெல்லை 35 ஆகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com