31 நலன்புரி முகாம்களிலுள்ள 971 குடும்பங்கள் யாழில் இன்னமும் மீள் குடியமர்த்தப்படவில்லை !

SAM_1633 copyயாழ் மாவட்டத்தில் இன்னமும் 971 குடும்பங்களைச் சேர்ந்த 3,405 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பதாக யாழ். மாவட்டச் செயலக புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக்குடும்பங்கள் யாழ் மாவட்டத்திலுள்ள 31 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. இவர்களில் அதிகபட்சமாக உடுவில் பிரதேசத்தில் 9 நலன்புரி முகாம்களில் 358 குடும்பங்களைச் சேர்ந்த 1299 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விட உறவினர் வீடுகள் மற்றும் ஏனைய பிரதேசங்களில் தற்காலிக இருப்பிடங்கள், வாடகை இருப்பிடங்கள் பெற்று வாழ்கின்ற மக்களையும் உள்ளடக்கியதாக 10 ஆயிரத்து 770 குடும்பங்களைச்சேர்ந்த 37 ஆயிரத்து 433 பேர் மீள்குடியமர்த்தப்படாதுள்ளதாக தெரியவருக்கின்றது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் பதவியேற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு வலிவடக்கில் மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருக்கின்ற நிலையில் கடந்த டிசம்பர் மாதம் யாழ்ப்பணத்தில் கொண்டாடப்பட்ட தேசிய நத்தார் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் ஆறு மாத காலப்பகுதிக்குள் வலிவடக்கில் அனைத்து மக்களையும் மீள்குடியேற்றுவதாக ஊறுதியளித்திருந்தார்.

கடந்த மே மாதத்துடன் ஜனாதிபதியின் வாக்குறுதிக்காலம் முடிவடைந்தபோதும் இன்னமும் 971 குடும்பங்களைச் சேர்ந்த 3,405 பேர் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலி வடக்கு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் அண்மையில் கருத்துத் தெரிவித்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சித்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நல்லாட்சி அரசு வலிவடக்கில் மக்களிடம் கையளித்த காணிகள்  முன்னைய மகிந்த அரசு மக்களிடம் கையளிப்பதாக இருந்த காணிகளே எனவும் . விடுவிக்கப்பட்டநிலப்பத்திரங்களில்கூட முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷவின் கைஒப்பமே இருந்தாகவும் நல்லாட்சி அரசை கடுமையாகச் சாடியதோடு இந்த அரசு மீள் குடியேற்ற விடையத்தில் எதையும் செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com