சற்று முன்
Home / செய்திகள் / 302 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஒரு வருடத்தின் பின் போட்டிப் பரீட்சை

302 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஒரு வருடத்தின் பின் போட்டிப் பரீட்சை

வடக்கு மாகாண தமிழ் மொழில்மூலப் படசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் திறந்த போட்டிப் பரீட்சை ஒன்றுக்கு தயாராகிவருவதாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

349 பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்ளீர்ப்புச் செய்யும் குறித்த பரீட்சைக்காக கடந்த வருடம் 06.07.2017 அன்று பத்திரிகைககள் வாயிலாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

எனினும் ஒரு ஆண்டுகளாக பரீட்சை எதனையும் நடத்தாது இழுத்தடிப்புச் செய்து வந்த வடக்கு மாகாண அரசாங்கம் வழிகாட்டலும் ஆலோசனையும் பாடத்திற்கான 47 ஆசிரியர்களுக்கான விண்ணப்பத்தினை நீக்கம் செய்து ஏனைய படங்களிற்கு நிலவும் 302 ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப்பரீட்சையினை விரைவில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com