30 பவுண் நகைகளை ஏப்பம் விட்டனரா யாழ் பொலிசார் ?

நகை வர்த்­த­கர்­க­ளி­ட­மி­ருந்து தங்­கத்­தை­யும் பணத்­தை­யும் கப்­ப­மா­கப் பெற்­று­வந்­தார்­கள் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் பொலிஸ் உப பரிசோதகர் உள்ளிட்ட 3 பொலிசார் 30 பவுண் நகைகளையும் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தையும் கப்பமாகப் பெற்றுவந்துள்ளமை இதுவரையான விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் திருட்டுக்கள், கொள்ளைகளின்போது அபகரிக்கப்படும் நகைகளை யாழ்ப்பாண நகரத்திலுள்ள நகைத் தொழிலாளிகள் சிலர் குறைந்த விலையில் பெற்று உருக்கித் தங்கமாக்கி வருகின்றனர் என்று கூறப்பட்டுவந்த நிலையில், அந்த நகைத் தொழிலாளிகளிடம் இருந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கத்தையும் பணத்தையும் கப்பமாகப் பெற்றுவந்த விடயம் அவர்களிடையே ஏற்பட்ட பங்குப் பகிர்வுப் பிரச்சினையால் வெளியே கசிந்தது.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் நகைத் தொழிலாளிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. குறித்த தகவலை ஒரு நகைத் தொரிலாளியே தெரிவித்துள்ளார் என்று குறிப்பிடும் பொலிஸார், நகைகளை வழங்கிய திருடர்களின் வாக்குமூலங்களைப் பதிவதற்கான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன என்றும் கூறினர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கப்பம் கோரியவேளை ஏற்பட்ட பிணக்கின்போது நீதிவான் ஒருவரின் பெயரையும் பயன்படுத்தியுள்ளதாக வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

கப்பம் கோரப்பட்டமை தொடர்பில் விரைவில் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கப்பம் பெற்றார்கள் என்று குற்றஞ்சாட்டப்படும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 3 பேரும் இன்னும் கடமையில் உள்ளனர் என்றும் பொலிஸாரால் மேலும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com