30வருடம் போராடி எதைக் கண்டோம் – நானும் துரோகி எனில் என்னையும் கொன்றுவிடுங்கள் – சுமந்திரன் எம்.பி

vakeesam-braking-newsஎங்களுடைய மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவகையிலே ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாகுவது சாத்தியமற்றது என்று நாங்கள் எப்போது தீர்மானிக்கின்றோமோ அதற்கு அடுத்தநாள் நாம் அங்கு இருக்கமாட்டடோம். இது எங்களுடைய மக்களிற்கும் எமது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் திடமாகத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் எனஎபாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்றினை நேற்றையதினம் (16.10.2016) வவுனியாவில் மேற்கொண்டிருந்தனர். அங்கு உரைநிகழ்த்தும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

இரண்டு மாதம்தானே கேட்கின்றோம்  பொறுத்திருங்கள் முடியாவிட்டால் நாம் சொல்லுவோம் அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்று. 30வருடம் போராடி என்னத்தைக் கண்டிருக்கிறோம். நீலன் திருச்செல்வம் பற்றிச்  சொன்னீர்கள். அமிர்தலிங்கம் பற்றிச் சொன்னீர்கள். எங்கு இரண்டுபேரும் இண்டைக்கு. ஆகவே எல்லாத்தையும் தொலைத்துப்போட்டுத்தானே இன்று நிற்கின்றோம்.

அதுக்குள்ளே உங்களால் பொறுக்கேலாது பொறுக்கேலாது என்றால் சுமந்திரனையும் கொல்லுங்கள்.  ஆரையும் கொல்லுங்கோ. எவரையும் கொல்லுங்கோ. என்னசெய்யப்போகிறீர்கள். சுமந்திரன் துரோகி என்றுதானே சொல்கிறீர்கள். நீலன் திருச்செல்வத்தை துரோகி என்றுதானே கொன்றீர்கள். அதிர்தலிங்கத்தைத் துரோகி என்றுதானே கொன்றீர்கள். என்னையும் கொல்லுங்கள்.

எங்களுடைய மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவகையிலே ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாகுவது சாத்தியமற்றது என்று நாங்கள் எப்போது தீர்மானிக்கின்றோமோ அதற்கு அடுத்தநாள் நாம் அங்கு இருக்கமாட்டடோம். இது எங்களுடைய மக்களிற்கும் எமது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் திடமாகத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

இதை ஆரவாரத்திற்காக அல்லாமல் சர்வதேச அங்கீகாரத்திற்காக செய்யவேண்டி ஏற்பட்டால் நாம் அதைச் செய்வோம். ஆனால் அப்படியாக எமது மக்களுடைய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியலமைப்புச் சட்டம் உருவாகுவதற்கு ஒரு சதவிதிகமேனும் வாய்ப்பு இருக்கிறவகைக்கும் நாங்கள் அதனைக் கைவிடமாட்டோம். ஆனால் வெளியிலே பலர் கொக்கரிக்கின்றார்கள் என்பதற்காக நாங்கள் அதனை விட்டுவிட்டு ஓடிவரப் போவதில்லை.

எதை அடைவோம் என்று நாங்கள் சொன்னோமோ அதை அடையக்கூடியவிதத்திலே செயற்படுமாறு முழுமையான பொறுப்பு எம்மிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே அதை நிறைவேற்றுகிறவரைக்கும், அதை நிறைவேற்ற முடியாவிட்டால் சொல்லுவோம் முன்னரே சொல்லிவிடமாட்டோம்  என்றார் அவர்.

இதுவரைக்கும் உலகத்திலே நடந்துமுடிந்த சர்வதேச விசாரணைகளில் இதுவே உலகத் தரம்வாய்ந்த சர்வதேச விசாரணை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com