3 நாட்களில் 15 இலட்சம் பேர் பார்த்த, உருகவைக்கும் காதல் அல்பம்

காதல் என்றுமே முடிந்துபோகாது. ஏதாவது ஒரு புள்ளியில் நம்மைச் சுற்றித்தான் வரும் என்பதை  அழகியலுடன் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது இந்த வீடியோ.
இம்ரான் ஹாஸ்மி, இஷா குப்தா நடிப்பில் யூடியூப்பில் வெளியாகி வைரல் ஹிட் அடித்திருக்கும் அல்பம் தான் “ மெயின் ரகூன் யாநா ரகூன்” பாடல் வீடியோ.
ஜானட்2, ராஸ்3 படங்களில் இம்ரானுக்கு ஜோடியாக நடித்திருப்பார் இஷா குப்தா. அந்தப் படங்களிலேயே ரொமான்ஸில் இளசுகளை அதகளப்படித்திய இந்த ஜோடியில் இந்த ஆல்பம் உருவாகியிருப்பது இன்னும் ஸ்பெஷல்.  ஹனி சிங்கர் குரலில் “தீரே தீரே சே” மற்றும் “ஹா பாய் ஜா”, ஜாண்டே ஹாய் உள்ளிட்ட ஆல்பங்களை வெளியிட்ட பூஷன் குமாரின் தயாரிப்பில் அடுத்து வெளியாகி வைரல் ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது இந்த மெயின் ரகூன்.  

சிறுவனிடம் தன்னுடைய காதல் கதையை இம்ரான் சொல்லிக்கொண்டிருப்பது போல ஆல்பம் ஆரம்பிக்கிறது. கோவாவில் இம்ரானுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் இஷா. இவளின் ஒவ்வொரு அசைவிலும் காதலில் விழுகிறார் இம்ரான். ஒருநாள் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்று அவளின் விட்டிற்குள் நுழைகிறார் இம்ரான். இஷாவுக்கு திருமணம் நிச்சயம் முடிவாகியிருப்பது அப்போது தான் இம்ரானுக்குத் தெரியும். 

இந்தக் கதையை கேட்டுக்கொண்டிருக்கும் அந்தச் சிறுவன் இஷாவின் மகன் என்பது வீடியோவின் முடிவில் தெரியும். இஷாவுக்கு திருமணமாகியிருந்தாலும், அவனின் காதலை அவளிடம் சொல்லாமல் மனதிலேயே ஒளித்து வைத்து இன்று வரையிலும் அவளையே நினைத்து உருகும் காதலே இந்த ஆல்பம்! 

அமித் ஷர்மா இயக்கத்தில் டி – சீரியஸ் வெளியிட்ட இந்த ஆல்பம் வெளியான மூன்றே நாளில் 15லட்சம் பேர் பார்வையிட்டுள்ளது கூடுதல் செய்தி. 

அல்பத்திற்கு:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com