தொடரும் மண்சரிவு மலையகத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு

2நாட்டின் பல பாகங்களில் நேற்று (27) மாலை முதல் கடும்ப மழை பெய்துள்ளதால் சீரற்ற காலநிலை தொடர்ந்தவண்ணமுள்ளது. மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டத்தில் 28.05.2016 அன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் 200 பேர் இடபெயர்ந்துள்ள அதேவேளை லிந்துலை காவற்துறை பிரிவிற்குட்பட்ட மெராயா தங்ககலை கேம்பிரி மேற்பிரிவு தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 100 பேர்வரை நிர்க்கதியாகியுள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்பு சுவர்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியிலுள்ள 41 குடும்பங்களை சேர்ந்த 200 பேரை உடனடியாக வெளியேற்றி தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையத்திலூம் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் பல பிரதேசங்களில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக இயற்கை அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மண்சரிவு ஏற்படக் கூடிய பிரதேசங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெய்த அடை மழை காரணமாக 28.05.2016 அன்று அதிகாலை 3 மணியளவில் லிந்துலை காவற்துறை பிரிவிற்குட்பட்ட மெராயா தங்ககலை கேம்பிரி மேற்பிரிவு தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குறிப்பாக பின்புரத்தில் உள்ள சமையல் அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, அதிலிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்குடியிருப்பு பகுதியில் பின் புரத்தில் இருந்த பாரிய மண்மேடே சரிந்து விழுந்துள்ளது. இதில் இரண்டு வீடுகளிலும் இருந்த 6 குடும்பங்களை சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த லய குடியிருப்பு தொகுதியில் 20 வீடுகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளதாகவும் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் 100 பேர் நிர்க்கதிக்குள்ளாகும் நிலை ஏற்படும் என இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அத்தோடு மேற்படி பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களை சேர்ந்த 27 பேரை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கும், நிவாரண உதவிகளை பெற்றுப்கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.IMG_5326 IMG_5329 IMG_5346 IMG_5351 IMG_5354

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com