27 வருடங்களின் பின் மயிலிட்டி விடுவிப்பு (படங்கள்)

மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனுடன் இணைந்த 54 ஏக்கர் காணி 27 வருடங்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டு உள்ளன. காணிகளை விடுவிக்கும் நிகழ்வு இன்று காலை 09.30 மணியளவில் மைலிட்டியில் நடைபெற்றுள்ளது.

இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகப் பகுதி மற்றும் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த நிலப்பகுதி உள்ளடங்கலாக 54 ஏக்கர் நிலப்பரப்பு யாழ்.பாதுகாப்பு தலைமையகத்தினால் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதன் பத்திரங்கள் யாழ்ப்பாணம் இராணுவ கட்டளை தளபதி ஹெட்டியாராச்சியினால் யாழ்ப்பாண அரச அதிபர் என்.வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

யாழ் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ள குறித்த காணிகள் விரைவாக பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. மயிலிட்டி கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை இந்தப் பிரதேசத்தில் சுமார் 50 குடும்பங்கள் உடனடியாக மீளக் குடியமரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com