2592 பட்டதாரிப் பயிலுனர்களுக்கு நியமனம்

பட்டதாரி பயிலுனர்கள் 2592 நியமனம் வழங்கும் நிகழ்வு  பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் செவ்வாய்க்கிழமை (12)  காலை 9.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெற்றது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கே இந்நியமனம் வழங்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர், நியமனங்கள் பெற்ற உத்தியோகத்தர்கள் மாற்றங்களை பெறுவதற்காக காலத்தை விரயம் செய்யாது நியமனங்கள் வழங்கப்பட்ட பிரதேசங்களில் தமது கடமையை பொறுப்புடன் செயற்படுத்துமாறு தெரிவித்தார்.
மேலும், புதிதாக இணைத்துக்கொள்வர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று பலர் தேவையற்ற பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். அவ்வாறில்லை. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கப்படும்.
மக்களிடமிருந்து பெறப்படும் வரியினூடாக அரசாங்கத்துக்கு 2000 பில்லியன் வருமானம் கிடைக்கிறது. அதில் 40 வீதம் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. மக்களின் பணத்தில் பெற்றுக்கொள்ளும் சம்பளத்தினூடாக உற்பத்தி திறன் மிக்க செயலை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே, சுங்கப்பணிப்பாளர் நாயகம் சூலநந்த பெரேரா உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com