சற்று முன்
Home / செய்திகள் / 2019 ஐ முதன் முதலாய் வரவேற்று கொண்டாடிய நாடுகள்

2019 ஐ முதன் முதலாய் வரவேற்று கொண்டாடிய நாடுகள்

2019 புத்தாண்டை சமோவா மற்றும் கிரிபடி ஆகிய நாடுகள் முதன்முதலாக வரவேற்றுள்ளன.
அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து மக்கள் 2019 ஆம் ஆண்டுப்பிறப்பை குதூகலமாக கொண்டாடியுள்ளனர். நியூஸிலாந்தின் ஒக்லண்டில் பெருமளவானோர் கூடி புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

இதனிடையே இலங்கை நேரப்படி மாலை 6.30க்கு அவுஸ்திரேலியாவில் புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டம் இடம்பெற்றது.

புத்தாண்டை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சிட்னி நகரில் வான வேடிக்கைகளில் ஈடுபட்டனர்.

புத்தாண்டுப்பிறப்பினை முன்னிட்டு மிகப்பெரியளவிலான வாணவேடிக்கைகள் காண்பிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புத்தாண்டை வரவேற்பதற்காகவும், வாணவேடிக்கைகளைக் காண்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு குழுமியிருந்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com