யாழ் மாவட்டச் செயலகம் முன் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அணிதிரளுமாறு வடக்கு பட்டதாரிகள் சமூகம் அழைப்பு

கடந்த வாரம் கொழும்பில் பட்டதாரிகளினால் மேற்கொள்ளப்பட்டிருந்த “அனைத்து வேலையற்ற பட்டதாரிகளிற்கும் நியமனம் வழங்குதல் வேண்டும்” என்ற வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை போராட்டத்தில் மேற்கொண்ட நீர் வீச்சுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக வடக்கு மாகாண பட்டதாரிகள் சமூகம் அறிவித்துள்ளது.

யாழ் மாவட்டச் செயலக முன்றலில் நாளை மறுதினம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த போராட்டம் தொடர்பில் வடக்கு மாகாண பட்டதாரிகள் சமூகத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு,

“அனைத்து வேலையற்ற பட்டதாரிகளிற்கும் நியமனம் வழங்குதல் வேண்டும்” என்ற வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை போராட்டத்தில் மேற்கொண்ட நீர் வீச்சுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இடம்: யாழ் மாவட்ட செயலகம் முன்
காலம்: 16/05/2018
நேரம்: காலை 10 மணி

தற்போது வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றுள்ளது. ஆனால் நேர்முகத்தேர்வு நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் எப்போது , எதுவரை வழங்கப்படவுள்ளது என்பது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவலை குறித்த அமைச்சு வெளியிடவில்லை. இதன் பொருட்டு எழுத்துபூர்வமாக 35 வயதிற்கு மேற்பட்டவர்களையும், 2017 வேலையற்ற பட்டதாரிகளையும் உள்வாங்குதல் வேண்டும் எனவும் பட்ட சான்றிதழ் இறுதித் திகதியினடிப்படையிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்குதல் வேண்டும் என கொழும்பில் நடந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நீர் வீச்சு மேற்கொள்ளப்பட்டு எமது தொழில் உரிமைக்கு எதிராக செயற்பட்டமைக்காக நாடளாவியரீதியில் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட 35 வயதிற்கு மேற்பட்ட; வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உரிய அமைச்சுக்கு பெயர் விபரங்கள் வழங்கப்படவுள்ளது.

குறிப்பு: அன்றைய தினம் வருபவர்களின் பெயர் விபரங்கள் மட்டுமே எம்மால் வழங்கப்படும்.

தகவல்
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com