சாராயக்கடை திறப்பும் ! வன்முறையற்ற போதை ஒழிப்பும் !! – எதிர்த் திசைகளில் தமிழரசு எம்.பிக்கள்

வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போமென தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியினர் களமிங்கியுள்ள நிலையில் கிளிநொச்சியெங்கும் மதுபான சாலைகள் திறக்கப்படவேண்டும் என தமிழரசுக் கட்சியின் பிறிதொரு நாடாளுமன்ற உறுப்பினர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

நேற்றுமுன்தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கருத்துரைத்திருக்கும் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு மதுபான சாலைகள் தேவையென குரல் எழுப்பியுள்ளார்.

இந்நிலையிலேயே தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியினால்  யாழ்ப்பாணம் மையப் பேருந்து நிலையத்துக்கு முன்னால் வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போமென விழிப்புணர்வுச் செயற்திட்டம் இன்று (06) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதல்வர் ஆர்னோல்ட், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர்.

“வன்முறையை ஒழிப்போம், இளைஞரை வளர்ப்போம், சமூக சீரழிவை ஒழிப்போம், நற் சமுதாயத்தை உருவாக்குவோம்” என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட கிழக்கு சமூக நல்லிணக்கத்திற்கான அமைப்பு எனும் அமைப்பினை உருவாக்கி இந்தச் செயற்திட்டத்தை முன்கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் சிறிதரன் எம்.பியின் கை ஓங்குவதை விரும்பியிருக்காத நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சிறிதரனுக்கு எதிரான செயற்றிட்டம் ஒன்றினை கிளிநொச்சியை மையப்படுத்தி உருவாக்க விளைவதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com