எனக்கு ஏன் சிக்கன்-கால் வைக்கவில்லை ? ஆணையாளர் மீது சினந்த யாழ் மாநகர உறுப்பினர் !!

 

தனக்கு வழங்கப்பட்ட உணவில் சிக்கன் கால் வைக்கப்படவில்லை என மாநகர உறுப்பினர் ஒருவர் பொதுவெளியில் நின்று சர்ச்சையில் ஈடுபட்டமை அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரசபையின் இரண்டாவது அமர்வு இன்று நடைபெற்றது. மதிய உணவின்போது தனக்கு சிக்கன் கால் வைக்கப்படவில்லை எனக் கூறிய யாழ் மாநகர உறுப்பினர் ஒருவர் சபா மண்டபத்தின் முன் நின்று நானும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதியே இங்கு என்னை மதிக்கவில்லை என யாருடனோ சத்தமாக தெலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தார்.
அவ்விடத்தால் யாழ் மாநகர ஆணையாளர் வரவே அவரை இடைமறித்த குறித்த உறுப்பினர் பொதுவிடத்தில் வைத்து ஆணையாளருடன் தனக்கு சிக்கன்கால் கிடைக்காமை தொடர்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

அதனை யாழ் மாநகரசபையின் பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பார்த்து முகம் சுளித்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com