அவசர ஒன்றுகூடலுக்கு பட்டதாரிகளுக்கு அழைப்பு !

எதிர்வரும் மே 8 ஆம் திகதி கொழும்பில் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் ஆகியன ” அனைத்து பட்டதாரிகளுக்கும் அரச நியமனங்களை விரைந்து வழங்குதல் வேண்டும் ” என பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளது. இது தொடர்பாக நாளை (05.05.2018) சனிகிழமை காலை 09 மணியளவில் யாழ் மாவட்டச் செயலகம்முன்பாக நடைபெறும் அவசர கலந்துரையாலுக்கு அனைத்துப் பட்டதாரிகளையும் ஒன்றுகூடுமாறு வட மாகாண பட்டதாரிகள் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் செய்திக் குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண பட்டதாரிகள் சமூகம்,

தற்போது நேர்முகத்தேர்வு நடை பெற்ற தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் 20000 அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் ஊடாக அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்குமான நியமனங்களை வழங்க முடியாது. அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் அரச நியமனங்களை வழங்க அரசு பிற அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களில் நிரப்புதல் வேண்டும்.

மேலும் 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளை முழுமையாக உள்ளீர்த்தல் , 2017 இல் வெளியேறிய வேலையற்ற பட்டதாரிகளை உள்ளீர்த்தல் வேண்டும் எனவும் இவ் கவனயீர்ப்பு போராட்டம் நடை பெறவுள்ளது.

35 வயதிற்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் 2017 இல் வெளியேறிய வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் பிற வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுதல் வேண்டும். உங்கள் பிரச்சனைகளை நீங்கள் தான் கதைத்தல் வேண்டும்.
உ+ம்: 35 வயதிற்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் எங்களுடன் போராட்டத்தில் இணைந்து உங்கள் பிரச்சனைகளை நேரடியாக நீங்கள் தான் அமைச்சர்களிற்கு குறிப்பிட வேண்டும்.- என்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com