வலி வடக்கில் 683 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் நிலம் இன்று மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் இன்று காலையில் இடம்பெற்ற இக் காணி கையளிப்பு நிகழ்வில் இரானுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு காணிகளை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு படையினர் வசமிருக்கின்ற காணிகள் விடுவிக்கப்படுமென இரானுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெல்லிப்பழை நல்லிணக்கபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

அதே போன்று 650 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலையே புத்தாண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்படுவதாகக் கூறப்பட்ட இக் காணிகள் புத்தாண்டுக்கு முன்னதாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 5 கிராம சேவகர் பிரிவுகளைச் சேரந்த 12 நலன்புரி நிலைய ங்களில் வாழ்ந்து வரும் 964 குடும்பங்களு க்கு சொந்தமான 683 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் படையினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றதனடிப்படையில் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com