யாழ் போதனா வைத்தியசாலையில் கழிவு வாய்க்கால்மேல் கன்ரீன் – மக்கள் விசனம்

யாழ் போதனா வைத்தியசாலையின் நோயாளர்களிற்கான தற்காலிக கொட்டகையில் இயங்கும் சிற்றுண்டிச்சாலை மிகத்தாழ்ந்த தரத்தில் பேணப்படுவதாக மக்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிற்றுண்டிச்சாலையின் தேனீர் தயரிக்கும் பகுதி கழிவு வாய்க்காலுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோயாளர்களை பார்க்க வருவோரிற்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கும் வைத்தியசாலை நிர்வாகம் இதனை எவ்வாறு அனுமதித்தது ? எனக் கேள்வி எழுப்பியிருக்கும் மக்கள் இதனால் நோயாளிகள் பாதிப்படையக் கூடும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இவ்விடயத்தில் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com