மைத்திரிக்கு காவடி தூக்கிய மகிந்தவின் விசுவாசி !!

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இராணுவ தளபதி
மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆகியோருடைய ஒளிப்படங்களைத் தாங்கியவாறு வலி. வடக்கை சேர்ந்த ஒருவர் காவடி எடுத்தார்.

வலி. வடக்கில் இராணுவத்தினர் வசமிருந்த 683 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் நிகழ்வு
இன்று காலை இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்தக் காவடியை எடுத்தார்.

வலி. வடக்கு இராணுவ ஆக்கிரமிப்புக்கு 1990ஆம் ஆண்டு வந்த போது, அங்கிருந்து
இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவரும் நலன்புரி முகாம் ஒன்றுக்கு இந்த நபர் தலைவராக
இருந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

மகிந்த ராஐபக்‌ஷ ஆட்சி கால த்தில் அவருக்கு ஆதரவாக அரசியல் செயற்பாட்டை இவர்
முன்னெடுத்தார் கூறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com