மன்னாரிலும் 424 பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்குச் செல்லவில்லை !!

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் பட்டதாரிகளிற்கான நேர்முகத் தேர்விற்காக 978 பட்டதாரிகள் அழைக்கப்பட்டபோதும் 554 பட்டதாரிகள் மட்டுமே நேர்முகத் தேர்வில் தோற்றியதாக மாவட்டச் செயலக அதிகாரி தெரிவித்தார்.

20 ஆயிரம் பட்டதாரிகளிற்கு தொழில் வாய்ப்பு வழங்கும் நோக்கில் மாவட்டச் செயலகங்களில் நேர்முகத் தேர்வு இடம்பெறுகின்றது. இதில் மன்னார் மாவட்டத்தில் மொத்தம் 978 பட்டதாரிகள் உள்ளதாக கண்டறியப்பட்டு அனைவருக்கும் நேர்முகத் தேர்விற்கான அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு நேர.முகத் தேர்விற்கு அழைக்கப்பட்ட 978 பட்டதாரிகளில் 554 பட்டதாரிகள் மட்டும் தோற்றிய நிலையில் 424 பட்டதாரிகள் நேர.முகத் தேர்விற்கு தோற்றவில்லை. இதேநேரம் நேர்முகத் தேர்வில் தோற்றிய பட்டதாரிகளில் 121 பட்டதாரிகள் 2017ம் ஆண்டிற்கான பட்டதாரிகள் அதேபோன்று மேலும் 32 பட்டதாரிகளிடம் சான்றிதழ் இருக்கவில்லை.

இவ்வாறு மொத்தமாக மன்னார் மாவட்டத்தில் நேர்முகத் தேர்விற்குத் தோற்றிய பட்டதாரிகளில் கோரப்பட்ட தகமைகளை பூர்த்தி செய்யப்பட்ட பட்டதாரிகளாக 380 பட்டதாரிகளே இனம்கானப்பட்டுள்ளனர் .

 

வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்கு சமூகமளித்திருக்கவில்லை என முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

(தகவல் – நன்றி – தயாளன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com