பிரித்தானியாவில் வீரத்தமிழர் முன்னணியின் “தாயகக் காற்று “ இசைச்சங்கமம்

வீரத்தமிழர் முன்னணியின் 3ஆம் ஆண்டின் நிறைவு நிகழ்வு பிரித்தானியாவில் அண்மையில் நடைபெற்றது.
பேராசிரியர் கல்யாணசுந்தரத்தினால் கொடி ஏற்றப்பட்டு ஆரம்பமாகிய நிகழ்வில் தாயகத்தில் எமக்காக வாழ்ந்தாரை வாழவைக்க – தாயகத்தின் முன்னணி இசையமைப்பாளரான இசைப்பிரியனின் “ தாயகக் காற்று “ இசைச்சங்கமம் மற்றும் பல கலை , கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய புரட்சி இசையான பறை இசை அணிவகுப்பு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்தப் பறை இசையினை “பறை விடுதலைக்கான குரல்” அமைப்பினர் வழங்கியிருந்தனர். பறை இசை அணிவகுப்பினை இராசேந்திரம் சுதன் தலமைதாங்கி தனது பறை இசை வீரர்களான சிவசுதன் , நிரஞ்சனி , கபிலன் , சுரேஷ் இராமநாதன், துஷாதரன் கணேஷ் , அனோஜினி , ஆனந் , பிரதீப் விஜயராசா , வாகீசன் தங்கவேல் , சுஜீவன் சிறிபாலகிருஷ்ணன் , உமாராஜ் என்னும் வீரர்களுடன் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் இருந்து வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளரான கல்யாணசுந்தரம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் பல ஈழ உணர்வாளர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com