பாராளுமன்ற கூட்டத்தொடருக்காக பெருந்தொகை நிதி – சபாநாயகர் மறுப்பு

பாராளுமன்ற கூட்டத்தொடருக்காக பெருந்தொகையான நிதி செலவிடப்படுகின்றது என்ற கூற்றை சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்துள்ளார். பாராளுமன்ற கூட்டத்தொடருக்காக பெருந்தொகை பணத்தை செலவிடுவதாக சில அரசியல் கட்சிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்து வரும் நிலையில் சபாநாயகர் அதனை நிராகரித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் மே மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இது தொடர்பாக சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையில், பாராளுமன்ற கூட்ட அமர்வு நிகழ்விற்கு பெருந்தொகையான பணம் செலவிடப்படுவதான கூற்று திரிபுப்படுத்தப்பட்ட ஒன்றாகும். மே மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிகழ்வில் பாராளுமன்ற உணவுக்காக கூட தனிப்பட்ட ரீதியில் பணம் செலவிடப்படமாட்டாது.

பாராளுமன்ற அலுவல்களுக்கான செலவு வழமை போலவே இடம் பெறுகின்றன என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com