கரைச்சி பிரதேச சபையில் முகம் சுள்ளிக்கவைத்த தமிழரசு (படங்கள்)

கரைச்சிப் பிரதேச சபையினை தமிழ்க் கூட்டமைப்பு கைப்பற்றிய நிலையில் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது ஆதாரவாளர்களும் பிரதேச சபை மண்டபத்தில் நடந்துகொண்ட விதம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

முருகேசு சந்திரகுமார் தலமையிலான சமத்துவ மக்கள் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு சவால்விடும் வகையில் வளர்ந்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் குறித்த கட்சி கணிசமான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியபோதும் வழமை போலவே யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி நடந்துகொண்டதுபோன்று பேரினவாத கட்சிகளான சிறிலங்கா சுதந்திரகட்சி மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

முருகேசு சந்திரகுமாரின் கட்சியை கரைச்சிப் பிரதேச சபையில் தோற்கட்டித்த மகிழ்ச்சியை தன்னிலை மறந்து சபைக்குள் விசிலடித்துக் கொண்டாடிய விதமே அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

சபையில் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் அவரது ஆதரவாளர்களும் தமது ஆதரவாளரான வேழமாலிகிதனை தவிசாளர் ஆக்கிய மகிழ்ச்சியில் சபைக்குள் விசில் அடித்து நடனமாடும் காட்சிகள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பளை பிரதேச சபை தவிசாளர் சுரேன் உள்ளிட்ட குழுவினர் நடனமாட,ஆதரவாளர்கள் விசிலடிக்க கொண்டாட்டங்கள் சபா மண்டபத்தில் நடத்தப்பட்டமை சபையின் மாண்பை மதிக்காத செயலென அவதானிகள் தெரிவிக்கின்றன.

ஒரு தமிழ்த் தரப்பு கட்சி உறுப்பினரை பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்து தோற்கடித்ததை தன்னை தமிழ்த் தேசியவாதியாகக் கூறிக்கொள்ளும் ஒருவரது தரப்பு இவ்வாறா கொண்டாடுவது என மக்கள் முகம் சுளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com