ஆசிரியை மீதான வாள் வெட்டுக்கு சுவிஸ் நாட்டிலிருந்து உத்தரவு – பொலிசார் விளக்கம்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியர் அவரது தாய் மீதான தாக்குதல் சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இன்றைய தினம்(30) கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியர் மற்றும் அவரது தாய் மீது மேற்கொள்ளப்பட்ட வெட்டு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பொலிஸார் தாக்குதலாளிகளின் இலக்கு தவறியுள்ளதாகவும் அவர்கள் தாக்க வந்த இலக்கு நடன ஆசிரியரின் தங்கை எனவும் குறிப்பிட்டனர்.

சம்பவம் நடைபெற்ற போது நடன ஆசிரியரின் தங்கை வீட்டில் இருந்துள்ளார்.எனினும் தாக்குதல் நடைபெற ஆரம்பமான போது தன்னை சுதாகரித்துக்கொண்டு அறை ஒன்றில் ஒளிந்து கொண்டதாக விசாரணையின் போது குறிப்பிட்டள்ளார்.

இந்த தாக்குதலுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தனது கணவரின் முதலாவது வயது கூடிய மனைவி தான் காரணம் எனவும் சில தினங்களுக்கு முன்னர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமண முறிவு பத்திரத்தில் கையெழுத்து இடுமாறு அவர் அச்சுறுத்தினார்.
இதனால் நான் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து போது எனது கணவரின் வேண்டுகோளின் படி சமாதானமாக சென்றதாகவும் மீண்டும் திடிரென இவ்வாறு சுவிஸ் நாட்டு பெண் தன்னை தாக்குவதற்கு கூலிக்கு நார்களை அமர்த்தி தன்னை கொலை செய்ய முயற்சித்துள்ளதாக கூறினார்.

குறித்த இச்சம்பவத்திற்கு அச்சுவேலியை பிறப்பிடமாக கொண்ட 32 வயதுடைய இளைஞர் ஒருவரே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.இவர் சுவிஸ் நாட்டில் உள்ள வயது கூடிய பெண்(அன்ரீ) ஒருவரை சூழ்நிலை காரணமாக திருமணம் முடித்துள்ள அதே வேளை இலங்கைக்கு விடுமுறைக்கு வந்த போது கொக்குவிலில் உள்ள நடன ஆசிரியரின் தங்கை மீது ஆசை கொண்டு சுவிஸ் நாட்டில் உள்ள தனது மனைவிற்கு தெரியாமல் மறு மணம் ஒன்றை செய்துள்ளார்.

இந்த விடயம் தற்போது முதலாவது மனைவிற்கு தெரியவந்ததை அடுத்து பிரச்சினை எழுந்து தற்போது வெட்டுச்சம்பவத்தில் முடிவடைந்துள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த நாகராசா லீலா(வயது50) தாய்இநடன ஆசிரியையான 34 வயதுடைய நாகராசா யாளினி ஆகியொர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com