காத்தான்குடியில் காணாமல் போன வர்த்தகர் கல்லடி வாவியில் சடலமாக மீட்பு

காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை இரவு காணாமல் போன வர்த்தகர், இன்று மாலை மட்டக்களப்பு – கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். 35 வயதான .எல்.எம். முஹம்மது முபாறக் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாதணி உற்பத்தி நிறுவன வர்த்தகரான இவர் நேற்றிரவு மஞ்சந்தொடுவாயிலுள்ள தனது தொழிற்சாலைக்கு அருகிலுள்ள உணவகத்தில் தேனீர் அருந்தி விட்டு வெளியேறியுள்ள நிலையில் காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com