இலங்கையில் சேதன விசாயத்திற்கு பெயர் பெற்ற வாகரையில் அவ்விவசாய்த்திற்குப் பாதிப்பு- மட்டு அரச அதிபர் கவலை

 

இலங்கையில் வாகரை சேதனப்பசளை பயிர்ச்செய்கை மூலம் பொருள்களை உற்பத்தி செய்வதில் பிரபலம் பெற்றிருந்தது. தற்போது ஒரு சிலரது நடவடிக்கைகளினால் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்பு ஏற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

மட்;டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவு, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும், மதுரங்கேணி, கிரிமிச்சை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான சிறுபோக ஆரம்பக் கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை (15) காலை பிரதேச செயலக மண்டபத்தில் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

அதி மேதகு ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் நஞ்சற்ற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்கின்ற திட்டத்தினை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

இலங்கையில் வாகரை சேதனப்பசளை பயிர்ச்செய்கை மூலம் பொருள்களை உற்பத்தி செய்வதில் பிரபலம் பெற்றிருந்தது. தற்போது ஒரு சிலரலு நடவடிக்கைகளினால் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்பு ஏற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

அது தொடர்பான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுள்ளளோம். விவசாயிகளாகிய நீங்கள் வருகை தருகின்ற எல்லோருக்குப்பின்னாலும் செல்கின்ற நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இங்கு அரச நிறுவனங்கள், அதன் உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்களிடம் அறிவிக்க வேண்டும்.

அல்லாது விட்டால் திணைக்கங்களின் அலுவலகங்களிலேனும் முன்வையுங்கள். இவ்வாறான உத்தியொகத்தர்கள் எல்லாத்திணைக்களங்களிலும் இருக்கிறார்கள். அவர்களுடைய அறிவுரைகளைப் பெற்று செயற்பட முயலுங்கள்.

வருகை தருகின்ற சில வெளி நிறுவனங்கள் கடன்கள் வழங்குவதாகச் சொல்லி அக் கடனின் பெரும் பகுதியை அவர்களே பயன்படுத்துவதாக அறிகிறோம் . அவர்களுடைய தேவைக்காக விவசாயிகளாகிய உங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக் கமுடியாது.

குறிப்பாக கக்கரிச் செய்கைக்காக 3 லட்சம் அல்லது 2 அரை லட்டசம் கடனுக்கு கையொப்பம் பெற்று 20 -30 ஆயிரம் ரூபாவை விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிய முடிகிறது. இது ஒரு மோசடியான வேலைத்திட்டமாகும். இது சம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை விடுத்தள்ளேன்.

இதன்போது போது, விவசாயத் திணைக்களம் மத்தி மற்றும் மாகாணம், நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், தேசிய உரச் செயலகம், விதை நெல் தர நிர்ணய சபை, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், தென்னை பயிர்ச் செய்கை, பனை அபிவிருத்தி சபை, விவசாய கமநல காப்புறுதி சபை, வனவளத் திணைக்களம், சமுர்த்தி, மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம், நிரக இனங்கள் அபிவிருத்தி அதிகார சபை, கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்கள் உள்ளிட்டவைகளின் கடந்த காலச் செயற்பாடுகள் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன.

விதை நெல் விநியோகம், மானிய உர விநியோகம், நீர்ப்பாசனம் குறித்தும் வங்கிக் கடன்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

????????????????????????????????????

????????????????????????????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com