இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் லண்டனில் கருத்தரங்கு

புலம் பெயர் தமிழர்களின் “எதிர்கால தமிழினத்தின் பரிணாம வளர்ச்சியின் பங்களிப்பு” (EVOLUTION AND FUTURE ROLE OF THE DIASPORA) எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு ஒன்று நேற்று முன்தினம் 18/3/2018 லண்டனில் உள்ள NORTHOLT VILLAGE COMMUNITY CENTRE இல் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமரின் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக் கருத்தரங்கில் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை எதிர் காலத்தில் எவ்வாறு உறுதிப்படுத்துவது மற்றும் புலம்பெயர்த் தேசங்களில் வாழும் இளையோர்கள் மூலம் இலங்கை வாழ் தமிழர்களின் சமய, கலாச்சார, சமூக, பொருளாதார, அரசியல் நலன்களை எவ்வாறு வென்றெடுப்பது போன்ற கருப்பொருள்களிலும் ஆராயப்பட்டதுடன்
இக்கருத்தரங்கில் தமிழ்ச்சமூகம் அரசியல்ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் எதிர்கொள்ளப்போகும் சவால்கள்,ஊடக வெற்றிடமும் இராஜதந்திர உறவுகள் செழிப்புறாமையும் எமது தாயக மீட்புப் போராட்டத்தில் ஏற்படுத்திய பின்னடைவுகள், கிட்டு அண்ணாவிற்கு பிற்பாடான வெற்றிடம் நிரப்பப்படாமை ஆகிய விடயங்களுடன், புலம்பெயர் தமிழர்களின் பலமும் அறிவும் எமது போராட்டம் நோக்கி எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும், எமக்குள்ள சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்படாமல் விடப்படும் ஒவ்வொரு நொடிகளும் ஈழத்திற்கும் புலத்துக்குமான இடைவெளி அதிகரித்துச் செல்வதும் அதன் ஆபத்துக்கள் தொடர்பாகவும் ஆளமாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு மாணிக்கவாசகர், பிரதமரின் பிரத்தியேக செயலர் திரு வசந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.முருகதாஸ், திரு.நீதிராஜா, திரு.நிமலன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com