மாவிட்டபுரம் குருக்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தமிழரசு அழுத்தம் (02 ஆம் இணைப்பு)

அரசியல் கட்சி ஒன்று ஆலயத்தில் வழிபாடாற்ற அனுமதித்ததாகவும் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாகவும் கூறி மாவிட்டபுரம் ஆலய குருக்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தமிழ் அரசுக் கட்சி காங்கேசன்துறைப் பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நாளை (11) குருக்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த காங்கேசன்துறைப் பொலிசார் முயன்று வருவகாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் ஆலயத்துக்கும் குருக்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில்  மறுப்பு வெளியிடுமாறு குறித்த குருக்கள் பத்திரிகை நிறுவனத்துக்கு சென்று மறுப்பு அறிக்கை கொடுத்த போது குருக்களிடம், நீங்கள் செய்தது சட்டரீதியாக குற்றமாகும். இதற்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என மிரட்டும் தொனியில் கூறியதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் இந்து மத அமைப்புக்கள் மெளனித்திருப்பதாக ஆலய மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதன் பின்னராக இன்று (11) வாகீசத்துடன் தொடர்புகொண்ட மாவிட்டபுரம் ஆலய குருக்கள் குறித்த பத்திரிகை நிறுவனத்தினால் தான் மிரட்டப்படவில்லை என்றும் தன்னால் கொடுக்கப்பட்ட மறுப்பு அறிக்கையினை பெற்றுக்கொண்டு  ஊடகத்தில் பின்னர் அதனை வெளியிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com