தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய இணையத்தளம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய இணையத்தளத்தின் பெயர் www.elections.gov.lk என்பதாகும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பலவருடங்களாக பயன்படுத்தப்பட்டுவந்த தேர்தல் செயலகத்தின் அதாவது தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் புத்தாண்டிலிருந்து இந்த பெயர்மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக www.selection.gov.lk என்ற பெயருக்கு பதிலாக தற்பொழுது www.elections.gov.lk என்று மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

முன்னைய பெயரிலான இணையத்தளத்தில் தொழில்நுட்ப சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டதனாலேயே புதிய உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com