தலவாக்கலையில் ஜனாதிபதி தலைமையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் “சேவல்” சின்னத்திலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் “வெற்றிலை” சின்னத்திலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் முகமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் 28.01.2018 இன்று ஞாயிற்றுகிழமை காலை 02 மணிக்கு தலவாக்கலை நகர சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். இக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, எஸ்.பீ.திஸாநாயக்க, இ.தொ.காவின் பிரதி தலைவர் அம்மாவாசை ராமையா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஊவா மாகாண மற்றும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர்களான செந்தில் தொண்டமான், மருதபாண்டி ரமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் மற்றும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com