தமிழ் மக்கள் பேரவையின் கருத்தரங்கை தடுப்பதற்கு சதி !! – பொதுமக்களை அணிதிரள அழைப்பு !!!

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ள சமகால அரசியல் கருத்தரங்கை தடுப்பதற்கான கடும் பிரயத்தனங்களில் தமிழ் அரசியல் கட்சியொன்று தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்ட வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படும் தமிழ் மக்களின் சமகால அரசியல் நிலைமை தொடர்பிலான மக்கள் கருத்தாடல் நிகழ்வு இன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி கருத்;தரங்கில் விவாதிக்கப்படும் விடயங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பாட்டால் அவை தமது அரசியலுக்கு பாதகமாக அமைந்து விடும் என்பதாலேயே குறித்த தமிழ் அரசியல் கட்சி இக் இவ் மக்கள் கருத்தாடல் களத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்பதில் கங்கணம் கட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரசிங்கில் குறித்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு கருத்தரங்கை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவிதித்திருந்தது.

இந் நிலையில் குறித்த கருத்தரங்கு இன்று வீரசிங்கம் மண்டபத்தில் பிறபகல் 4 மணிக்கு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தமிழ் மக்கள் பேரவை அதற்கான அறிவித்தலை விடுத்துள்ளது.
இந்நிலையில் குறித்த கலந்தரையாடலை இன்றைய தினமும் தடுத்து நிறுத்துவது எப்படி என்பது தொடர்பில் குறித்த தமிழ் அரசியல் கட்சியின் உயர் பீடம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இரவிரவாக கூடி தீவிரமாக ஆராய்ந்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் குறித்த கலந்துரையாடல்களின் போது தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் கருத்தாடல் நிகழ்வில் விவாதிக்கப்படும் விடயங்கள் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுவதாக அமையும் என்ற கோணத்தில் தேர்தல் ஆணைக்குழு ஊடாக தடுத்து நிறுத்தமுடியுமா? என்பது தொடர்பில் சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்துள்ளதாகவும் தேர்தல்கள் சட்டத்தினை கொண்டு இந் நிகழ்வினை இன்று தடைசெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் குறித்த அரசியல் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நம்புவதாகவும் இக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த நிகழ்வினை தடைசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட தரப்பினர் இக் கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கு கொள்வதை தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளிலும் குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களை களமிறக்கிவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எனவே இச் சதிமுயற்சியைத் தடுக்கும் நோக்கில் குறித்த நிகழ்வுக்கு பொதுமக்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com