உற்பத்தித் திறன் போட்டியில் சுன்னாகம் மேற்கு அறிஞர் ஐயன்னா முன்பள்ளி முதலிடம்

உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முன்பள்ளிகளுக்கிடையிலான உற்பத்தித் திறன் போட்டி – 2017 இல் அறிஞர் ஐயன்னா முன்பள்ளி முதலாமிடத்தினைப் பெற்றுள்ளது.
இவ் உற்பத்தித்திறன் போட்டியில் சுமார் 50 முன்பள்ளிகள் பங்குபற்றியிருந்தன. இம் முன்பள்ளி சுன்னாகம் மேற்கு, கந்தரோடை வீதியில் அமைந்துள்ளது. குறித்த முன்பள்ளியில் கற்றல்-கற்பித்தல், நிர்வாகச் செயற்பாடுகள் சிறப்பாகக் காணப்படுவதோடு 60 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கல்விகற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com