2018இல் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவது சந்தேகம்!

பதவிக்காலம் நிறைவடைந்த மாகாணங்களின் தேர்தலை 2018ஆம் ஆண்டு நடைபெறுவது சந்தேகமேயென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைந்துள்ளது. இருப்பினும் இவற்றின் தேர்தலை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாக அதனைத் தள்ளிப் போடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்த வேளையில் உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால் அது கைவிடப்பட்டது. பின்னர் அவசரமாக மாகாணசபைத்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதனை நிறைவேற்றியது.

இதன்படி மாகாணங்களுக்கான எல்லை நிர்ணயம் செய்யப்படவேண்டும். இது தொடர்பாக மகிந்த தேசப்பிரிய கருத்துத் தெரிவிக்கையில்,

அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் மூன்று மாகாணங்களினதும் தேர்தல் நடத்தப்படவேண்டும். தேர்தல் நடத்துவதற்கு முன்னர் எல்லை நிர்ணயம் செய்வதுடன், அனைத்தும் மீளாய்வு செய்யப்படவேண்டும்.

இந்நிலையில், இப்பணிகள் அனைத்தும் 2018ஆம் ஆண்டு நிறைவடையும் என்பது சாத்தியமற்றது. ஆகவே 2018ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என்பதும்  சந்தேகமே எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com