யாழில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு!

நேற்று முன்தினம் கொக்குவில் பொற்பதி வீதியில் கடமையிலிருந்த பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக யாழ். நகரமெங்கும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 21ஆம்நாள் வடமராட்சியில் மண் ஏற்றியவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டினையடுத்து ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு கடமையிலிருந்த கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக அரசாங்கம்அறிவித்தது.

இதனையடுத்து மறு நாள் நீதிபதி இளஞ்செழியன் மீது நல்லூர் பின்வீதியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவத்தில் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்.

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் கொக்குவில் பொற்பதி வீதியில் வாள்வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இரண்டு பொலிஸார் காயமடைந்தனர்.

காயமடைந்த பொலிஸாரை பார்வையிடுவதற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர யாழ்ப்பாணத்துக்கு திடீர் பயணம் மேற்கொண்டதுடன், காயமடைந்த பொலிஸாரை சந்தித்தார்.

பின் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் முப்படைகளின் உதவியுடன் வாள்வெட்டில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்யப்போவதாக அறிவித்தார். இதனையடுத்து யாழ் நகரமெங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

யுத்தகாலத்தை நினைவுபடுத்துவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com