பொலிஸார் மீது வாள் வெட்டு! கைதானவர்களின் விபரம்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து பொலிஸார் இருவர் மீது நடத்தப்பட்ட வாள் வீச்சுச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது பெயர் விபரங்களும்வெளியிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என ஆறுபேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட இருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஏனைய நான்குபேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, பிரதான சூத்திரதாரி நிஷா விக்டர் என்று அழைக்கப்படும் சத்தியவேல் நாதன்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட வினோத் என்று அழைக்கப்படும் ராஜ்குமார் ஜெயக்குமார்.

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த மனோஜ் என்று அழைக்கப்படும் குலேந்திரன் மனோஜித். ஆகியோர் நேற்று காலை புறக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டவர்களாவர்.

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் போல் என்பவர் மட்டக்குளியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த சிறிகாந்தன் குகதாஸ் என்பவரும் மேலும் ஒருவருடைய பெயர் வெளியிடப்படவில்லை, இருவரும் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆறு பேரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com