தண்டவாளத்தில் தலை வைப்போம் !! – மிரட்டும் மாகாணசபை உறுப்பினர்

வடக்கில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் தொடர்பில் மத்திய அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் ரயில் தண்டவாளத்தில் ரயில் மறிப்புப் போராட்டம் நடத்துப்போவதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் எச்சரித்துள்ளார். வடக்­கி­லுள்ள பாது­காப்­பற்ற ரயில் கட­வை­க­ளி­னால் ஏற்­ப­டும் விபத்­து­க­ளைத் தடுக்க உடன் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என வலி­யு­றுத்தி நேற்றைய (24) சபை அமர்­வில் மாகா­ண­ச­பை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா பிரே­ரணை ஒன்றை முன்வைத்தார். பிரேரணை குறித்த விவாதத்தில் உரையாற்றும்போதே வடக்கு மாகாண சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் சுகிர்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்­கி­லுள்ள ரயில் கட­வை­கள் பல பாது­காப்­பற்­ற­வை­யா­கக் காணப்­ப­டு­வ­த­னால் தொடர்ச்­சி­யான விபத்­து­கள் இடம்­பெற்று பல உயி­ரி­ழப்­பு­க­ளும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. இவ் விபத்­து­க­ளைத் தடுப்­ப­தற்­கான உடனடி நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடவேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி ரயில் தண்டவாளத்தில் இருந்து ரயில் மறிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை எதிர்க்கட்சித்தலைவரின் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com