ஜெகத் ஜெயசூரிய பிரேசிலிருந்து தப்பியோட்டம்!

போர்க்குற்றவாளியும் இலங்கை முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிரேசில் தூதுவருமாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜெயசூரிய, உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பினால் தொடரப்பட்ட வழக்கொன்றுக்குப் பயந்து பிரேசிலைவிட்டுத் தப்பியோடிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இறுதிக் கட்ட போரின்போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனி குலத்திற்கு எதிரான கொடூரங்களுக்கு அப்போதைய வன்னி கட்டளைத் தளபதியாக இருந்த ஜகத் ஜயசூரியவும் பொறுப்பு கூற வேண்டும் என குற்றஞ்சாட்டி, நீதிக்கும் நியாயத்திற்குமான சர்வதேச செயற்றிட்டம் பிரேசிலின் வழக்கொன்றை தொடர்ந்துள்ளது.

இதனையடுத்தே ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரேசிலை விட்டு வெளியேறியுள்ளதாக பிரேசிலின் சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்களை அப்பட்டமாக மீறிய சம்பவங்களுடன் தொடர்புடைய படைத்தளபதிகள் மற்றும் அரசியல் தலைமைத்துவங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான தலைவரான ஜஸ்மின் சூக்கா சூளுரைத்துள்ளார்.

இந்நிலையில், மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக விளக்கமளிக்க சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான தலைவர் ஜஸ்மின் சூக்கா பிரித்தானியாவில் ஊடகவியலாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படைகளின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டவரே மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய என்பதுடன், காணாமல் ஆக்கியமை, பொதுமக்கள் கூடும்இடங்களில் எறிகணை வீச்சுத் தாக்குதல், வீமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பானவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com