கோப்பாய்க்கு வருகிறது இந்திய இராணுவம்!

கோப்பாய் தெற்கு, பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணு அதிகாரியுடைய கல்லறை ஒன்றை 30 வருடங்களின் பின்னர் மீண்டும் புனரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை நேற்றைய தினம் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். கடந்த 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத காலப்பகுதியில் கோப்பாய் தெற்கு, இராஜவீதியில் உள்ள வெள்ள வாய்கால் பிராயடி பகுதிக்கு அண்மையில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாமில் பொறுப்பதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ஒருவர் அந்த கால பகுதியில் இடம்பெற்ற மோதலின் போது உயிரழந்துள்ளார்.

அப்போது குறித்த பகுதியில் அவரின் நினைவாக கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் அந்த கல்லறை தற்போது வரை கவனிப்பாரற்று இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்குறித்த இராணுவ அதிகாரியுடன் பணியாற்றிய சக இராணுவ சிப்பாயாக இருந்த பி.எம்.ஹரிஸ் என்பவர் தற்போது இந்திய இராணுவ படைகளின் தளபதியாக உள்ளார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க குறித்த கல்லறை புனரமைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் எதிர்வரும் 19 ஆம் திகதி குறித்த பகுதியில் உள்ள கல்லறைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குறித்த தளபதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிய வருகிறது. எனவே எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வுக்கு குறித்த பகுதியை தயார்படுத்தும் வகையில் அந்த கல்லறையை சுற்றியுள்ள பற்றைகள் குப்பைகளை நேற்றைய தினம் இலங்கை இராணுவத்தினர் அகற்றியுள்ளனர். அத்துடன் இராணுவ அதிகாரிகள் சிலரும் குறித்த பகுதியை பார்வையிட்டு சென்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com