கிளிநொச்சி அதி சொகுசு பேரூந்து விபத்து – மின்சார சபைக்கு 25 இலட்சம் சேதம் – 6 பேர் காயம்

கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட  அதி சொகுசு பேரூந்து விபத்துக்குள்ளானதில்  ஆறு பேர் காயமடைந்தோடு, மின்சார சபைக்கு  25  இலட்சம் வரை சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை கொழும்பிலிருந்து  யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த  அதி சொகுசு பேரூந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கருகில் ஏ9 வீதியில் விபத்துக்குள்ளானது.இதன் போது ஆறுபேர்  காயமடைந்துள்ளனா். காயமடைந்தவா்கள் உடனடியாக மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

விபத்து தொடர்பில் பொது மக்கள் கருத்து தெரிவிக்கும் போது அதி வேகமாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேரூந்து ஏ9 வீதியின் குறுக்காக பிரிதொரு வாகனத்தை அவதானித்த போது பேரூந்து சாரதி பேருந்தை சடு சடுத்தியாக திருப்பிய போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது   அதியுயர்  மின்கம்பம், தொலைதொடர்பு கம்பவம் என்பவற்றை உடைத்துக்கொண்டு

கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தில் மோதுண்டுள்ளது.

இதன்போது மின்சார சபையின் மின்மாற்றி ஒன்றும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமுற்றுள்ளது. அதன் பெறுமதி 20 இலட்சம்  மற்றும் மின் கம்பிகள், கம்பங்கள்  என மொத்தமாக 25 இலட்சத்திற்கு மேல்  சேதம் ஏற்பட்டுள்ளது என சம்பவ இடத்தில் நின்ற மின்சார சபையின் பொறியியலாளா் ஒருவா் தெரிவித்தாா்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸாா் மேற்கொணடு வருகின்றனா்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com