இரணைதீவ மக்கள் கொழும்பில் போராட்டம்

தங்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி, கிளிநொச்சி, இரணைதீவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைந்த அவர்கள், அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல முற்பட்ட வேளையில் பொலிசாரால் லோட்டஸ் வீதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முன்னோக்கி நகர முடியாதவாறு வீதித் தடைகள் போடப்பட்டுள்ளதோடு பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இப்போராட்டம் குறித்துக் குறிப்பிட்ட இரணைதீவு மக்கள்,

“ இரணை தீவில் நாங்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அங்கு நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம். தற்போது கொழும்பில் போராட்டம் நடத்த வந்துள்ளோம். எமது போராட்டத்திற்கு ஜனாதிபதி உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கம் தீர்வு வழங்கும் எனும் நம்பிக்கையில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துள்ளோம்.
நாங்கள் கேட்கும் காணிகள் 150 வருட பூர்விக காணிகள். அவை விடுவிக்கப்படவேண்டும். அங்கு வசித்த 182 குடும்பங்களின் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் எங்களிடம் உள்ளன. 1992 ஆம் ஆண்டு காணப்பட்ட யுத்த சூழல் காரணமாக நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம். தற்போது பூநகரி பிரதேச்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றோம். – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com