அரசமைப்பின் வழிநடத்தல் குழு கூடவுள்ளது!

அரசமைப்பின் வழிநடத்தல் குழு, எதிர்வரும் 6ஆம் திகதியன்று கூடவுள்ளது. இந்த கூட்டத்தின் போது, தயாரிக்கப்படும், வழிநடத்தல் குழுவின் இடைக்கால வரைபை, நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாரத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில், புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பி­லான தமது, யோசனைகள் மற்றும் கருத்­துக்­களை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் கட்சி தயா­ரித்­துவிட்­டது. அந்த அறிக்கை அனே­க­மாக அர­சமைப்பு உரு­வாக்­கத்துக்கான வழி­நடத்­தல் குழு­வி­டம் கையளிக்க ஏற்பாடாகியிருந்தது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அந்த அறிக்கை கிடைக்குமாயின், அர­ச­மைப்பு உரு­வாக்கத்­தில் கடந்த பல மாதங்­க­ளாக நீடித்து வந்த தடை நீக்­கப்­ப­டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சுதந்­தி­ரக் கட்­சி­யின் அறிக்­கையை, இடைக்­கால வரை­வு­டன் பின்­னி ணைப்­பா­கச் சேர்த்தே, எதிர்வரும் 6ஆம் திகதியன்று இடம்பெறவிருக்கின்ற வழி­ந­டத்­தல் குழுவின் அமர்­வில் முன் வைக்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­ப­டு கி­றது.

வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால வரைவு கடந்த ஆண்டு டிசெம்­பர் மாதம் தயா­ரிக்­கப்­பட்­டது. வரைவு தயா­ரிக்­கும்­போது இணங்­கிக் கொண்ட விட­யங்­க­ளி­லி­ரு     ந்து ஸ்ரீ லங்கா சுதந்தி­ரக் கட்சி பின்­னர் பின்­வாங்­கத் தொடங்­கி­யது. இத­னால் புதிய அர­சமைப்பை உரு­வாக்­கும் பணி­கள் தேக்க நிலையை அடைந்­தன.

ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக் கட்சி, தன்னுடைய அறிக்கையை கையளிக்காமையால், வழி­ந­டத்­தல் குழு­வின் கூட்டங்­களில் எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கமுடியாத நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com