வறிய நிலைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு விந்தன் கனகரத்தினம் 20 இலட்சம் ஒதுக்கீடு

நாற்பது வறிய நிலைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் இருபது இலட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி ஒதுக்கீடு மூலம் வட மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் 40 இலட்சம் ரூபா நிதியிலிருந்து நெடுந்தீவு மேற்கு மாதர் அபிவிருத்திச் சங்கத்திற்கு விற்பனைக் கூடம் அமைப்பதற்கும் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்குமாக ரூபா இருபது இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொகையில்
விற்பனைக் கூடம் அமைப்பதற்கு ரூபா பதினைந்து இலட்சம்,
மா அரைக்கும் இயந்திரம் ரூபா அறுபது ஆயிரம்,
ஈர அரிசி அரைக்கும் இயந்திரம் ரூபா நாற்பத்து ஐந்து ஆயிரம்
மிளகாய் தூள் அரைக்கும் இயந்திரம் ரூபா அறுபது ஆயிரம் ,
உழுந்து அரைக்கும் இயந்திரம் ரூபா அறுபது ஆயிரம்,
1000 லீற்றர் நீர் தாங்கி ரூபா பதினெட்டு ஆயிரம்,
நீர்த்ததாங்கி ஸ்ராண்ட் ரூபா முப்பத்து ஐந்து ஆயிரம்,
குளிர்சாதனப் பெட்டி ரூபா தொன்னூறு ஆயிரம்,
20 கதிரை Wood ரூபா நாற்பத்து ஆயிரம்,
3 phase மின்சாரம் ரூபா எண்பது ஆயிரம்,
பைப் லைன், வயரிங் ரூபா பன்னிரெண்டு ஆயிரம்
என மொத்தமாக ரூபா இருபது இலட்சம் ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் புளுக்கொடியல், பனாட்டு, வடகம், ஒடியல் மா, புழுக்கொடியல் மா, பலகாரங்கள், மோர் மிளகாய், ஊறுகாய், கருவாடு என்பன பொதியிட்டு விற்றல், உணவுப் பொருட்கள் உற்பத்தி போன்ற சுய தொழில் செயற்திட்டங்களை நாற்பது குடும்பங்களும் மேற்கொண்டு தங்கள் வாழ்க்கைச் செவுக்கான வருமானத்தை ஈட்டுவதற்கு இத் திட்டம் பெரிதும் உதவியாக அமையும் என கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com