கூட்டமைப்பிற்கு நான் வேண்டாதவன் தானே – மோடியுடனான சந்திப்பிற்கு யாரும் அழைக்கவில்லை – விக்கி வருத்தம்

“நான் கூட்டமைப்பிற்கு வேண்டப்படாதவன்.அதனால் என்னை மோடியுடனான இன்றைய சந்திப்பிற்கு எவரும் அழைக்கவில்லை” என ஊடகவியலாளர்களிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நேற்றைய விருந்துபசாரத்திற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு “மோடியோடு எதுவும் கதைக்கவில்லை”. கைலாகு கொடுத்தோம். என்னை அறிமுகப்படுத்தியபோது கடந்தமுறை சந்தித்துக் கதைத்ததைக் கூறி நினைவுள்ளதாகக் கூறினார் அவ்வளவுதான்.

எனினும் மோடியின் வெளியுறவுச் செயலர் அருகிலிருந்தார் அவருடன் பல விடையங்ளைக் குறிப்பிட்டிருக்கிறேன். மேலும் அதிகமான காணி எதனையும் மக்களிடமிருந்து பெறாது பிராந்திய விமானநிலையத்தை பலாலியில் உருவாக்குமாறு கேட்டுக்கொண்டேன். காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் தலைமன்னார் தனுஸ்கோடிக்கிடையிலான கப்பல் போக்குவரத்துக் குறித்தும் எடுத்துரைத்தேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com