இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின், திருகோணமலைக் கிளையின் 2017 வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டம்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின், திருகோணமலைக் கிளையின் வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டம்திருகோணமலைக் கிளை மண்டபத்தில் 28-05 2017 அன்று நடைபெற்றது.

இக் கூட்டத்தின் தொடக்கத்தில் சமீபத்தில் ஏற்படட வெள்ள அனர்த்தத்தில் உயிரிலந்த மக்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

இக் கூட்டத்தில் தலைவர் டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளன், கிளைச் செயலாளரும் -தேசிய செயலாளருமான திரு. எஸ். எச். நிமால்குமார், பொருளாளர் திரு எஸ். ஜெயசங்கர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், இளைஞர் பிரிவுத்தலைவர் திரு. ஏ. ஜே. பிரேமராஜா, இளைஞர் உறுப்பினர்களுடன் கிளை நிறைவேற்று அதிகாரி டாக்டர். என்.ரவிச்சந்திரன் சகல பிரதேசக் கிளைப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கௌரவ தலைவர் டாக்டர். குணாளன் உரையாற்றும் போது,

‘இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வளர்ச்சி அங்கத்தவர்களினதும் தொண்டர்களினதும் கைகளிலேயேதங்கியுள்ளது. தொண்டர்கள் தான் செஞ்சிலுவை இயக்கத்தின் முதுகெலும்பாவார்கள். சகல பிரிவுகள், அலகுகளது தலைவர்கள் தங்களது பிரதேசத்தில் பாதிப்புக்குட்பட்ட மக்களது நலனைக் கருத்திற் கொண்டுமனிதாபிமான, சமூகச் செயற்திட்டங்களைச் செயற்படுத்துதல் வேண்டும்.

மேலும் தத்தமது பிரிவுகளில் கூடுதலான அங்கத்தவர்களையும் தொண்டர்களையும் இணைத்துக் கொள்வதில்ஆர்வம் காட்டுதல் வேண்டும்’ எனக் கூறினார்.

இதே வேளை தேசிய செயலாளர் தமதுரையில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின், திருகோணமலைக்கிளை கடந்து வந்த பாதைகளை எடுத்துரைத்தார்.      

‘கடந்த 2004 முதல் 2009 வரை எமது சங்கம் கூடுதலான வெளிநாட்டு நிதியுதவியினைப் பெற்று பலமனிதாபிமானச் செயற்திட்டங்களை முன்னெடுத்தது. கடந்த 2009ம் ஆண்டுக்குப் பின்னர் எமது நாடு மத்தியவருமானமுள்ள நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டதன் பின் நன்கொடையாளர்கள் நிதியுதவி செய்வதிலிருந்துபின் வாங்கத் தொடங்கினர். அது மட்டுமல்ல சர்வதேச ரீதியில் பணப்புழக்கம் வீழ்ச்சியடைந்ததும் நிலைமைபாதிப்படைந்ததும் ஒரு காரணமாகும்’ எனக் கூறினார்.

இதை தொடர்ந்து அடுத்த நான்கு வருடங்களுக்கான செயற் குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார்கள்.

தலைவராக டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளன், உப தலைவராக திரு முரளிதரன், கிளைச் செயலாளராக – திரு. எஸ். எச். நிமால்குமார், பொருளாள ராக திரு எஸ். ஜெயசங்கர் மற்றும் ஆறு குழு அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளன் புதிய செயற் குழு உறுப்பினர்கள் சார்பாக, உரையாற்றுகையில் தங்கள் மீது வைத்த நம்பிக்கையுக்காக நன்றி கூறி, சிறந்த முறையில் இலங்கைசெஞ்சிலுவைச் சங்கத்தின், திருகோணமலைக் கிளையை செயற் பட வைப்போம் என உறுதி கூறினார்

கூட்டத்தின் இறுதியில் தங்களது அர்ப்பணிப்பினை வழங்கிய இளைஞர் தொண்டர்களுக்கு, சான்றிதழ்கள்வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இறுதியில்கிளை நிறைவேற்று அதிகாரி டாக்டர். என். ரவிச்சந்திரன் நன்றியுரை நிகழ்த்தினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com